உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஈரானில் அமைந்துள்ள பல இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் “கூடுதல் தற்காப்புத் தாக்குதல்களை” நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் நியாயமற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மத்திய கட்டளையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈரானின் முக்கிய துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேநேரம், ஈரானின் கெஷ்ம் (Qeshm) மற்றும் ஹெங்காம் (Hengam) ஆகிய பகுதிகளில் கேட்கப்பட்ட வெடிப்புச் சத்தங்கள் “இராணுவ ஏவுகணைகளால்” ஏற்பட்டவை என ஈரானின் IRNA செய்திச் சேவை தெரிவித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0