உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அயர்லாந்தில் கலவரம் தீவிரம்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

வடக்கு அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஒருவர் கொ*லை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு நகரின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டங்கள் பின்னர் சில இடங்களில் வன்முறையாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், சில இடங்களில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்த கூடுதல் காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அமைதியை கடைப்பிடிக்கவும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அதன் பின்னணியில் ஏற்பட்ட சமூக பதற்றமும் அதிகாரிகளின் கவனத்தில் உள்ளது.

நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0