உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
51 பார்வைகள்

பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 17 நபர்களின் அமெரிக்கக் குடியுரிமையை (Naturalized Citizenship) ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியேறி, பின்னர் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட நபர்களே இவ்வாறு குடியுரிமை பறிப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவர்கள் தங்களது கடந்தகால குற்றப் பின்னணிகளை மறைத்து, மோசடியான முறையில் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டமை அல்லது குடியுரிமை பெற்ற பின்னர் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்தின்படி, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குடியேறிகளின் குடியுரிமையை ரத்து செய்து, அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கே நாடுகடத்துவதற்கு (Deportation) அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.

இதன்படியே, நாட்டின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0