ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணக்கம்!
இஸ்ரேலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரானும் அறிவித்துள்ளது.
எனினும், தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால், முன்னெப்போதையும் விட கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளுக்கு இது முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.