உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
63 பார்வைகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்துள்ள போராட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (11) காலை மன்னார் நகரில் இடம்பெற உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (8) மதியம் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் பா.ஜேக்குமார், கட்சியின் செயலாளர் ப.ஜஸ்ரின் துரம், கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச கிளை செயலாளர் ஐ.கனேசபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போதே குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி மன்னார் நகர பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

எனவே கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாட்டிலே இல்லாது செய்து சமமான நீதியை வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், சர்வமத தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

இப்போராட்டம் அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து குறித்த இளைஞரின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதோடு, குறித்த சட்டமும் மாற்றப்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0