உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாரவூர்தியுடன் சொகுசு பேருந்து மோதி கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல, கனதன பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக பஸ்ஸை ஓட்டுநர் இடது பக்கமாக திருப்பியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் வேகம் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் பலமாக மோதியுள்ளது.

இவ்விபத்து காரணமாக சொகுசு பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0