உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
42 பார்வைகள்

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கோளாறால் ஏற்பட்டது என்ற ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளைகம் முற்றாக நிராகரித்துள்ளது.

அத்துடன், அது ‘முற்றிலும் பொய்’ என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவக் காவல்படை (IRGC) உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தது.

குவைத்தின் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் தயாரிப்பான ‘பேட்ரியட்’ (Patriot) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதிலிருந்து தவறுதலாகப் பாய்ந்த ஏவுகணையாலேயே இந்தச் சேதம் சம்பவித்துள்ளது என ஈரானிய இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

ஈரான் திட்டமிட்டு, எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயணிகள் வானூர்தி நிலையத்தின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்பதே உண்மை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த தாக்குதலுக்கு ஈரானே முழுப்பொறுப்பு என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ மற்றும் தந்திரோபாய பதற்றம் மேலும் உச்சமடைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0