உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொற்பதி (J/420) கிராம அலுவலர் பிரிவில், 1 மில்லியன் ரூபா செலவிலான இறால் குளம் தூர்வாரும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீபன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இப்பணியை ஆரம்பித்து வைத்தார்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் திருமதி உஷா ராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருதங்கேணி திட்டமிடல் பணிப்பாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான திரு. ரமணன், திரு. ஷாம், திருமதி. பிரிதா மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள், கடற்தொழில் பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பொற்பதி கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொற்பதி கடற்தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீபன் அவர்கள் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தார்.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை விரைந்து பெற்றுத் தருவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

இறால் குளம் தூர்வாரப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கடற்தொழில் நடவடிக்கைகளும் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

53 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0