உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
55 பார்வைகள்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் காரணமாக விமான நிலையத்தின் ‘டி1’ முனையக் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, குவைத் நோக்கி ஈரானால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடையத் தவறின அல்லது நடுவழியில் உடைந்தன என்றும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் அமெரிக்க இராணுவம் தெரிவித்திருந்தது.

ஈரான் பிராந்திய அண்டை நாடுகள் மீது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய போதிலும், அவை அனைத்தும் இலக்குகளைத் தாக்கத் தவறிவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் தாக்குதல்களை நடத்தியதுடன், ஈரானின் பல பலிஸ்டிக் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் முறியடித்துள்ளதாக கூறப்படுகின்றது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0