உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த உந்துருளிகள் சிக்கின.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
172 பார்வைகள்

வெசாக் அலங்காரங்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பும் உந்துருளிகளில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த உந்துருளிகளையும் பொலிஸார் தமது பொறுப்பிற்குள் எடுத்துள்ளனர்.

பொறுப்பேற்கப்பட்ட பெரும்பாலான உந்துருளிகளின் சைலன்சர்கள் மாற்றப்பட்டு அல்லது வெட்டப்பட்டு, முறையற்ற விதத்தில் பாகங்கள் இணைக்கப்பட்டு அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம நகரில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உந்துருளிகளை மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைத்து, குற்றப்பத்திரிகை தயார் செய்ததன் பின்னர் உரிமையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

107 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

114 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

132 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0