உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மலேசியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது.

குழந்தைகளின் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியை மலேசியா அரசு முன்னெடுத்துள்ளது.

அதன்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கட்டாயமாக வயது சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் 16 வயதிற்குட்பட்டோர் கணக்குத் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதாவது, முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்களுக்கு இந்த விதி பொருந்தும்.

விதிகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு ரூ.24 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.

ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் கிளாரா கோ கூறுகையிர்ல,

‘இத்தகைய முழுமையான தடை பதின்ம வயதினரை முறைப்படுத்தப்படாத இணையப் பக்கங்களுக்குத் தள்ளிவிடும்,’ என்று எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0