உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காதலை ஏற்க மறுத்த இளம் யுவதிக்கு நேர்ந்த கொடூரம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர், அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், மேற்படி இளைஞரின் காதலை அந்த யுவதி தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்.

இதனால் கடும் மனவிரக்தியடைந்திருந்த அந்த இளைஞன், நேற்று மாலை யுவதி மீது கூரிய ஆயுதத்தால் வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞன் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

அவரைக் கைது செய்யப் பொலிஸார் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0