ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் “அதிவேகமாக” தொடர்கின்றன.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் “அதிவேகமாக” தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக ஊடகப் பதிவின் மூலமாக வெளியாகியுள்ள இந்த கருத்துக்கள், முன்னதாக வெளியான செய்தி ஒன்றுக்கு முரணானதாகக் காணப்படுகின்றன.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக, வொஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தெஹ்ரான் (Tehran) தீர்மானித்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும், இந்த விடயம் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.