உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவில் வணிக பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான இந்தியன் ஒயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திங்களன்று 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 42 வால் உயர்த்தியது.

இதனால் டெல்லியில் அதன் விற்பனை விலை 3,113.5 ரூபாவாக உயர்ந்தது.

கொல்கத்தாவில் இந்த விலை உயர்வு 53.50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதனால், அங்கு 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 3,255.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேற்கு ஆசிய மோதல் தொடர்பான அண்மைய இடையூறுகளைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் இருப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த விலை உயர்வானது , உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0