உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லி அமைச்சரவையில் மாற்றம்?

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

எதிர்வரும் ஒன்பதாம் திகதியுடன் இக்கட்சி தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டை ஆரம்பிக்கிறது.

இந்நிலையிலேயே, ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய நிலையில், அனைத்து அமைச்சர்களும் அடங்கிய அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்தார்.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக ஆட்சியின் 12 ஆண்டுகால பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

அதில் உள்ள நிறை, குறைகள் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அமைச்சரவை மாற்றம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்னும் மூன்று வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சில புதுமுகங்களுக்கு அமைச்சரவை பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மாற்றத்தில் 12 அமைச்சர்கள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இதில் தற்போதைய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் சிலர் கட்சிப்பணிக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0