உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வெடித்தது கலவரம்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
45 பார்வைகள்

சம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்களில் 219 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனேஸ் (Laurent Nuñez) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 57 பொலிஸ் அதிகாரிகளும் இந்த மோதல்களில் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் பாரிஸில் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளைப் பாதித்த இந்த வன்முறைகள் தொடர்பாக இதுவரை 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 450க்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கலவரக்காரர்கள் மறிக்க முயன்ற பாரிஸின் சுற்றுவட்ட வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 24 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வன்முறைகளுக்கு மத்தியில், பி.எஸ்.ஜி (PSG) அணியின் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் ஈபிள் கோபுரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் பங்கேற்புடன் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக மாத்திரம் சுமார் 6,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொது ஒழுங்கைப் பேணுவதில் பிரான்ஸ் ஒரு சிறந்த நாடு எனக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர், அமைதியான முறையில் ஒன்று கூடுவதை அனுமதிப்பதாகவும், ஆனால் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0