உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் துஷ் – பிரயோகங்களை கண்டித்து போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
48 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்டனப் பேரணியில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பக்கசார்பற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டமும், நீதி முறையும் சமமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்ற வாசகங்கள் குறித்த பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆரம்பமான ஊர்வலம் மன்னார் பஜார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்ட செயலக பகுதியை வந்தடைந்தது.

இதன்போது அவர்கள் பகிரங்க கோரிக்கையை முன்வைத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை பொது வெளியில் வாசித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0