உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
64 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.” – என்று பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தப்போது கூக்குரலிடும் தரப்பினர்தான், கடந்த 2017ஆம் ஆண்டு புதிய தேர்தல் சட்டத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தல் முறையை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கினார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்று தாங்கள் செய்த தவறை மறைத்து, நாங்கள்தான் இந்த நெருக்கடியை உருவாக்கியதைப் போன்று எதிர்க்கட்சியினர் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த வேண்டுமா அல்லது புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டுமா என்ற சட்டச் சிக்கலுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மிகத் தெளிவான வியாக்கியானத்தை அளித்துள்ளது.

தேர்தல் முறைமையில் காணப்படும் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகவே தற்போது நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்தத் பிரச்சினைக்கான தீர்வு அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட உடனே மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமைகளை விரிவாக ஆராய்ந்து, நாட்டுக்குப் பொருத்தமான ஒற்றைத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் விசேட நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒருவருட காலத்துக்குள் இக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேர்தல் முறைமைகளில் சட்டக் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நன்கு அறிந்தே, வெறும் அரசியல் வெற்றிக்காகத் தேர்தலை அவசரமாக நடத்த முடியாது. முறையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இன்றித் தேர்தலை நடத்தினால், அது நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தத் தவறைத்தான் செய்தார்கள். ஆனால், தற்போதைய அரசு ஒருபோதும் அந்தத் தவறைச் செய்யப் போவதில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

124 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

152 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0