உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

வேல்ஸில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்மர்தென்ஷையர் (Carmarthenshire) மற்றும் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேபோல், கடந்த வாரமும் பெம்ப்ரோக்ஷையரின் சாண்டர்ஸ்ஃபூட் (Saundersfoot) கடற்கரையில் நடைப்பயிற்சி சென்ற ஒருவரால் இதேபோன்றதொரு சுறா மீன்களின் குவியல் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயற்கை வளங்கள் வேல்ஸ் (Natural Resources Wales) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கூறியதாவது,

சாண்டர்ஸ்ஃபூட் கடற்கரையில் மீன்கள் இறந்து கிடந்தது தொடர்பாக நாங்கள் நடத்திய விசாரணையில், கடலில் எந்தவிதமான இரசாயனப் மாசுபாடும் (Pollution incident) ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவை பொதுவாக மீன்பிடிக்கும் போது தற்செயலாக வலையில் சிக்கும் ‘துணைப் பிடிப்பு’ (By-catch) மீன்களாக இருக்கலாம்.

மீனவர்களுக்கு இவை தேவையில்லை என்பதால் மீண்டும் கடலிலேயே தூக்கி வீசப்பட்டிருக்கலாம்.

பெம்ப்ரே கடற்கரையில் கண்டறியப்பட்ட வலை, கடலில் தொலைந்துபோன ஒரு மீன்பிடி வலையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடலலைகளின் சீற்றம் காரணமாகச் சாண்டர்ஸ்ஃபூட் கடற்கரையில் இருந்த பெரும்பாலான சுறாக்களின் உடல்கள் மீண்டும் கடலுக்குள்ளேயே இழுத்துச் செல்லப்பட்டுள்ளதால், தற்போது அங்கு பாதிப்புகள் ஏதுமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசித்திரச் சம்பவம் தொடர்பாகக் கார்மர்தென்ஷையர் மற்றும் பெம்ப்ரோக்ஷையர் உள்ளூராட்சி சபைகளிடம் மேலதிக விபரங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0