கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகல்!
கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் பதவி வகிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.
இதற்கமைய , கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று சித்தராமையா தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, அடுத்த முதல்வராக டி.கே. சிவக்குமாரை பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில் , துணை முதல்வர் சிவக்குமார் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார் .