உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
40 பார்வைகள்

முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைக் குறிவைத்து, அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஹார்முஸ் நீரிணையை சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்திய நான்கு ஈரானிய தாக்குதல் ட்ரோன்களை தங்கள் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐந்தாவது ட்ரோனை ஏவவிருந்த நேரத்தில் பந்தர் அப்பாஸில் உள்ள தளம் தாக்கப்பட்டதாக அப்பிரிவு கூறியது.

அதேநேரம், நகரின் கிழக்குப் பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவது மூன்று நாட்களில் இது இரண்டாவது முறையாகும்.

மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதல்கள் போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0