உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
68 பார்வைகள்

அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக எயார் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும், நஷ்டத்தில் இயங்கும் அந்த விமான நிறுவனம், சர்வதேச விமான சேவைகளை சுமார் 27 சதவீதம் குறைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

எயார் இந்தியா வாரந்தோறும் சுமார் 4,400 விமான சேவைகளை இயக்குகிறது.

இவை ஏறத்தாழ 3,600 உள்நாட்டு சேவைகளும், 800 சர்வதேச சேவைகளும் ஆகும்.

இந்த நிலையில், 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சேவைகளில் நாங்கள் முன்னதாக அறிவித்திருந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தற்காலிகமாகச் செயல்பாடுகளை முறைப்படுத்தியுள்ளோம் என்று எயார் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிக எரிபொருள் விலைகளின் தொடர்ச்சியான தாக்கம் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் இருப்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று விமான நிறுவனம் கூறியது.

மேலும், இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, மாற்று விமானங்களில் மீண்டும் இடம் ஏற்பாடு செய்தல், இலவச திகதி மாற்றங்கள் அல்லது முழுப் பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற பொருத்தமான உதவிகள் முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0