உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
52 பார்வைகள்

சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்றைய தினம் புதன்கிழமை (27) காலை முதல் மாலை வரை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான பிரச்சினைகளுக்கு சட்டத்தரணிகளின் சட்ட ஆலோசனை உள்ளடங்களாக அரச அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய சகல உதவிகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சட்டத்தரணி ஊடாக இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதுடன், அரச உத்தியோகத்தர்களிடமிருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டதோடு, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சுடன், UNDP மற்றும் UNICEF இணைந்து ஏற்பாடு செய்த குறித்த சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாமுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0