உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த வயல்வெளியொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 19 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவலில்,

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து, கஹதுடுவ – தியகம வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அதே வீதியில் எதிரே வந்த மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

இதன்போது எதிர்பாராதவிதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வயல்வெளியில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நேரிட்ட உடனே அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த பணியாளர்களை மீட்டனர்.

காயமடைந்த 19 பேரில் 17 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மற்றுமொரு பணியாளர் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தில் காயமடைந்த எவரினதும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும்,

அவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0