• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

Mathavi by Mathavi
May 26, 2026
in இலங்கை செய்திகள்.
0
சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!
Share on FacebookShare on Twitter

சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூச்சலிடுகிறார் என சாவகச்சேரி நகரசபையின் உப நகர பிதாவும், அருச்சுனாவின் ஆரம்ப கால ஆதரவாளருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மருத்துவ செலவிற்கு சேகரிக்கப்படும் நிதி குறித்த இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவ செலவிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவது குறித்து மிக மோசமான கருத்தை முன்வைத்துள்ளார். சிவாஜிலிங்கம் அண்ணனைப் பற்றி விமர்சிப்பதற்கு இந்த இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எந்த அருகதையும் இல்லை.

அர்ச்சுனா இராமநாதன் இந்த மண்ணுக்கோ அல்லது மக்களுக்கோ ஒரு துளி கூட நன்மை செய்யாத ஒருவர். மக்களை ஏமாற்றி அரசியலுக்கு வந்து புலம்பெயர் மக்களிடம் கோடிக்கணக்கான நிதியை திரட்டி சொகுசு வாழ்க்கை வாழ்கின்றவர் இராமநாதன் அர்ச்சுனா தான். ஆகவே அவர் தன்னைப்போல் மற்றவர்களையும் சிந்திக்கின்றார். புலம்பெயர் தேசங்களில் இருந்து சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்பினால் தனக்கு நிதி கிடைக்காது என்ற எரிச்சலில் அவர் இவ்வாறான மோசமான வேலைகளை செய்கிறார்.

இதே இராமநாதன் அர்ச்சனா வெளிநாட்டுக்குச் சென்று அங்கே நின்று எமது மண்ணையும், எமது இளைஞர்களையும் விற்கின்ற வகையில் கருத்து தெரிவித்தபோது நாங்கள் பகிரங்கமாக ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அதாவது எமது யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாததற்கு வருவதற்கு தயாரா என்று கேட்டிருந்தோம். அவர் வரவில்லை. அவருக்கு முதுகெலும்பு இல்லாததால் தான் விவாதத்திற்கு வரவில்லை போல.

மீண்டும் நாங்கள் கேட்கின்றோம் அர்ச்சுனா இராமநாதனுக்கு துணிவு இருந்தால், முதுகெலும்பு இருந்தால் யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள். நீங்கள் சொல்கின்ற இடத்திற்கு எமது இளைஞர்கள் வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

அத்துடன் மேலும் ஒரு பகிரங்க கோரிக்கையை முன்வைக்கிறோம். முடிந்தால் இன்னொரு தடவை தமிழக மண்ணில் கால் வையுங்கள் பார்ப்போம். நீங்கள் முதுகெலும்பு உள்ள ஒரு ஆளாக இருந்தால் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் சம்மதியுங்கள் பார்ப்போம்.

தெரிந்தோ தெரியாமலோ எமது மக்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி விட்டார்கள். அந்த வாழ்க்கையை ருசித்துக் கொண்டு மீண்டும் முதலமைச்சர் ஆகுவதற்கு பகல் கனவு காணுகிறார்.

அமிர்தலிங்கம், தந்தை செல்வா உள்ளிட்ட கல்விமான்களின் வழிவந்த எமது அரசியலானது தற்போது அர்ச்சுனா போன்றவர்களால் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருப்பது எமக்கு வெட்கக்கேடாக இருக்கின்றது.

அர்ச்சுனா இராமநாதன் என்ற ஒருவரை இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் ஒரு காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். வைத்தியர் என்ற பெயரில் இருக்கின்ற இந்த விஷச் செடியினை அறிமுகப்படுத்தியதற்காக எமது மக்களிடம் நாங்கள் பகிரங்க மன்னிப்புக்கு கோருகின்றோம்.

சிவாஜி அண்ணன் குறித்து இந்த அர்ச்சுனா என்கின்ற விஷக்கிருமி ஏதாவது கருத்துக்கள் முன்வைத்தால் நடப்பது வேறு. இதனை பகிரங்க எச்சரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். நீங்கள் எந்த பொலிஸ் நிலையத்திலாவது சென்று முறையிடுங்கள் பிரச்சினை இல்லை.

சிவாஜி அண்ணன் இரண்டு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை விடுதலை போராட்டத்திற்காக வழங்கியவர். இது பகிரங்கமாக அனைவருக்கும் தெரிந்த விடயம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் சொகுசாக வாழ்வில்லை.

2013ஆம் ஆண்டு சிவாஜிலிங்கம் அண்ணன் நினைவேந்தலில் ஈடுபடும்போது இராணுவத்தினர் அவரை சூழ்ந்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் பெரியகோவிலில் நினைவேந்தலில் ஈடுபடுகின்றபோது இராணுவத்தினர் அங்கே வந்த அந்த சுடர்களை கால்களால் தட்டி அவமானப்படுத்தினார்கள். அன்று இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்கள் மத்தியில் மாகாணசபை வளாகத்தினுள் தனி ஒருவராக நின்று நினைவேந்தலை மேற்கொண்டவர்.

இன்று நாங்கள் தேசியத் தலைவரின் பிறந்தநாளுக்கு பகிரங்கமாக கேக் வெட்டுகிறோம். ஆனால் அன்று கெடுபிடியான நேரத்திலும் கேக் வெட்டியவர்தான் சிவாஜி அண்ணன். இறுதி நேரத்தில் தேசியத் தலைவரின் தாயாரது மருத்துவ விடயங்களை கூட சிவாஜி அண்ணன்தான் கண்காணித்தார். தேசியத் தலைவரது தாயாரது இறுதிச் சடங்கினை கூட சிவாஜி அண்ணன்தான் நடாத்தினார்.

தமிழ் தேசியத்துக்காக இவை அனைத்தையும் துணிந்து செய்த சிவாஜி அண்ணனுக்கு எதிர்பார்த்த அளவு நிதியை விட அதிகமான நிதி கிடைக்க வேண்டும். இன்றைக்கு அவர் இந்த நிதியை கேட்டிருக்க மாட்டார். அவருடன் இருந்தவர்கள் வற்புறுத்தியதாலேயே அவர் இதனை கேட்டுள்ளார். அவர் கேட்டபடியால் தான் அனைவருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கும். அவரது மருத்துவ செலவுக்கு மாத்திரமன்றி அவரது பராமரிப்பு செலவுக்கும் தேவையான நிதி கிடைக்க வேண்டும். எனவே அவருக்கு கிடைக்கின்ற நிதி குறித்து யாரும் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள் என்றார்.

Related Posts

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில்...

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

by Mathavi
May 26, 2026
0

"நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி கனவு காண்பதாக ஆளுந்தரப்பு கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. இந்தத்...

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின்...

விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாண்டுவ - மொனராகலை வீதியின் 282ஆம் மைல்கல்...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் எனவும்,...

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

by Mathavi
May 26, 2026
0

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாசையூரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உரித்து ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நேருக்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி