போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தாக்குதல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர்நிறுத்த உடன்பாட்டின் மத்தியிலும், அமெரிக்கப் படைகள் ஈரானின் தெற்குப் பகுதியில் திடீர் “தற்காப்புத் தாக்குதல்களை” நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க கட்டளைப் பணியகத்தின் பேச்சாளர் கெப்டன் டிம் ஹக்கின்ஸ் தெரிவித்துள்ளா.