உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எபோலா வைரஸ் பரவல் தீவிரம் – WHO எச்சரிக்கை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

கொங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல், தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இணையவழி கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

எபோலா தொற்றாளர்களைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், நிலைமை சீரடைவதற்கு முன்னர் மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொங்கோவில் நிலைமைகளை ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் மற்றும் அவசரகால சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சிக்வே இஹேக்வாசு (Chikwe Ihekweazu) ஆகியோர் அங்கு விஜயம் செய்யவுள்ளனர்.

கொங்கோவின் அண்டை நாடுகள் உடனடியாக அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘பண்டிபுகியோ’ (Bundibugyo) எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

கொங்கோவின் இத்தூரி (Ituri) மற்றும் வட கிவு (North Kivu) மாகாணங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் இந்த அரிய வகை வைரஸிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லாதமை போன்றன இதனைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0