உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது “புதிய வடிவ அடிமைத்தனம்”

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
66 பார்வைகள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது “புதிய வடிவ அடிமைத்தனம்” என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ஆம் லியோ விமர்சித்துள்ளார்.

பூகோள அரசியல் மற்றும் வர்த்தக ஆதிக்கத்திற்காக சக்திவாய்ந்த அல்காரிதம்களை உருவாக்குவதை விடுத்து, AI தொழில்நுட்பத்தை உடனடியாக “ஆயுதமற்றதாக்க” (Disarm) வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வத்திக்கானில் அவர் வெளியிட்ட “Magnifica Humanitas” (மகத்துவமிக்க மனிதநேயம்) என்ற தனது முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைக்களஞ்சிய (Encyclical) போதனை அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிக்கம் மற்றும் மரணத்திற்கான ஒரு கருவியாக AI மாறுவதிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும் என்றும்,

அணுசக்தியைப் போலவே இதுவும் மனிதகுலத்தின் பொதுவான நன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் தன்னாட்சிப் போர்முறைகளுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வரும் முன்னணி AI நிறுவனமான Anthropic இன் இணை நிறுவனர் கிறிஸ்டோபர் ஓலா (Christopher Olah), திருத்தந்தையின் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளார்.

வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சிக்கலான AI செயல்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0