உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இரு சர்வதேச எரிவாயுக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்துள்ளதாக தகவல்

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
43 பார்வைகள்

இயற்கை எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக, குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘புவைரித்’ (Fuwairit) என்ற கப்பல் பாகிஸ்தானில் தனது சரக்குகளை இறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் கட்டாரில் சரக்குகளை ஏற்றியிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே, இரண்டாவது கப்பலான ‘அல் ரய்யான்’ (Al Rayyan) கப்பலும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 22 ஆம் திகதி, அந்த கப்பல் இறுதியாக வளைகுடா பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கப்பல் தற்போது ஓமன் மற்றும் ஈரானைப் பிரிக்கும் கடற்பகுதியில் நீரிணைக்கு வெளியே உள்ளதாகவும்,

எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி சீனாவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0