உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே சிறந்தது!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
56 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகச் சிறந்த தேர்வாகும் என ஈரானின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.

ஈரானின் செய்திச் சேவை ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

ஹோர்முஸ் நீரிணை மீதான தனது இறையாண்மைக்கு ஈரானிடம் வலுவான சட்ட மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த மேலாண்மை என்பது சுதந்திரமான வர்த்தகத்தைத் தடுப்பதற்கல்ல என்று சுட்டிக்காட்டிய அவர்,

மாறாக பாதுகாப்பற்ற நிலைமைகளையும் இராணுவப் பிரசாரங்களையும் தடுப்பதற்காகவே ஆகும் என இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதியுமான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போர் நீடிக்குமாயின், அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் அந்தநாட்டு மக்களையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே ஈரான் முன்மொழிந்துள்ள நியாயமான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த செலவைக் கொண்ட வழியாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0