உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வீதி விதிமுறைகளை மீறிய மானிப்பாய் பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்றையதினம் வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

அங்கு மானிப்பாய் பொலிஸார் கடமையில் இருந்தனர். இதன்போது பொலிஸார் தமது வாகனங்களை வீதி விதிமுறைகளை மீறி பாதசாரி கடவைக்கு அண்மையில் நிறுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

சாதாரண பொலிஸார் தமது முச்சக்கர வண்டியையும், வீதி போக்குவரத்து பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளையும் அங்கு நிறுத்தி வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் ஏற்கனவே அங்கு வேறு வாகனங்களும் தரிக்கப்பட்டு காணப்பட்டது. அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை ஆனால் அதற்கு பின்னர் வந்த வாகனங்களை அங்கே நிறுத்த வேண்டாம் என்று கூறி மக்களுடன் முரண்பட்டுவிட்டு தாங்கள் அங்கேயே தமது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறித்த வீதியானது போக்குவரத்து நெரிசலுடன் கூடிய சிறிய வீதியாக காணப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே அதனை தட்டிக் கழிக்கும் வகையில் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணை நடாத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் வழிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

1 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0