உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
49 பார்வைகள்



மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டது.

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது எபோலா வைரஸின் மிக அரிதான ‘புண்டிபுகியோ’ வீரியக் கிருமிப் பரவல் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 600 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, நோய்த்தொற்று உள்ளவர்களில், நோய் அறிகுறிகளைக் வெளியான பின்னரே எபோலா ஒருவருக்கொருவர் பரவும் தன்மையை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அமெரிக்க கடவுச்சீட்டு இல்லாத வெளிநாட்டுப் பயணிகள், அமெரிக்காவிற்குள் நுழைய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறிய நிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0