உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.

இன்று காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாச்சார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்களுடன் அன்பினை பகிர்ந்து கொண்டார்.

எனினும் இந்நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், தகவல் திணைக்களம் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்ட போதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிப்பது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது.

இது தவிர ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்தவொரு வசதியும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த கால அரசாங்கத்தில் ஊடகங்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டது போல தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமும் ஊடகங்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதை தடுத்தமை கவலைக்குரியதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0