உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான  வரிக்குறைப்புச் சலுகை நீடிப்பு.

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
57 பார்வைகள்

பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான  வரிக்குறைப்புச் சலுகை, இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசாங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


திட்டமிட்டபடி இந்த வரிச் சலுகை எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் படிப்படியாக நிறுத்தப்படாமல், நடப்பு 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வரி முடக்க நீட்டிப்பால் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு 455 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதால், இந்த சுமையை அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியும் எனப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரினால் எரிபொருள் விலை உயர்ந்தபோது, அப்போதைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் இந்த 5 பென்ஸ் வரிக்குறைப்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

12 மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்ட இந்தச் சலுகை, அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0