உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவில் கனமழை – 21 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் பலரைக் காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் பரப்பளவிலான பகுதிகள் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

குவாங்சி பகுதி மாகாணத்தில் பண்ணைத் தொழிலாளர்களுடன் பயணித்த பாரவூர்தி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.

இதில், வாகனத்தில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அத்துடன், தென்மேற்கு குயிஜவ் மாகாணத்தில் நால்வரும், தெற்கு ஹுனான் மாகாணத்தில் நால்வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், மத்திய ஹுபெய் மாகாணத்தின் தாழ்வான கிராமப் பகுதியொன்றில் மூவர் பலியாகியுள்ளனர்.

கனமழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் பல பகுதிகளில் பாடசாலைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அங்குள்ள குடியிருப்புக்கள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதுடன், பிரதான வீதிகள் மற்றும் சிற்றூர்திகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் ஒட்டுமொத்தப் போக்குவரத்து மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்கும் சீனா அரசு முதற்கட்டமாக 2.2 கோடி அமெரிக்க டொலர் பேரிடர் நிவாரண நிதியை அவசரமாக ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0