உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணை வழியாக 26 வணிக கப்பல்கள் பயணம்.

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கடந்த 24 மணித்தியாலங்களில்  26 வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு தாம் ஒருங்கிணைப்பு செய்துள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈரானின் அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து அனைத்தும் ஈரான் கடற்படையின் அனுமதி மற்றும் ஒருங்கிணைப்புடன் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 26 கப்பல்களில் எண்ணெய் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்களும் அடங்கும் என்பதுடன், சமீபத்தில் தென் கொரிய எண்ணெய் கப்பல் ஒன்றும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக கருதப்படுகிறது.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், வணிகக் கப்பல்கள் தங்களின் பாதுகாப்புக்காகவும், உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்காகவும் புதிய “பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டணங்களை” (Transit fees) செலுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் நேரடி அனுமதியைப் பெற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0