உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
65 பார்வைகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தமிழக அரசுக்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இல்லற வாழ்க்கையை நிறைவு செய்து, மனைவியின் மறைவுக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறிய இவர், அன்றிலிருந்து யாசகம் பெறத் தொடங்கினார்.

தனது தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, யாசகம் மூலம் கிடைத்த வருவாயில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40 அரச பாடசாலைகளுக்கு நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குடிநீர் இயந்திரங்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியதற்காக, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்ப்பட்ட முதல் யாசகர் இவராவார்.

கள்ளக்குறிச்சி தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நேரில் சென்று கொரோனா, வெள்ளம் மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிகளை இவர் வழங்கியுள்ளார்.

தற்போது விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தனது பங்களிப்பாக 10,000 ரூபாயை இந்த முதியவர் வழங்கியுள்ளார்.

எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றிய இவரது மனிதாபிமானச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0