உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டும்: ஐநா எச்சரிக்கை

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.

இது ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து தடையல்ல என்றும்,

அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளாவிய உணவு விலைவாசி மிகக் கடுமையான உச்சத்தை எட்ட இது வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அத்துடன், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான கால அவகாசம் மிக வேகமாக குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் மெக்சிமோ டொரெரோ (Maximo Torero) வெளியிட்டுள்ள புதிய ஒலிப்பதிவில் (Podcast),

நாடுகளின் பின்னடைவுத் திறனை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் இந்த விநியோகத் தடையால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்திர விலை மாற்றங்களை கண்காணிக்கும் ‘FAO உணவு விலைக் குறியீடு’  கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்வடைந்துள்ளது.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் இணைந்து மாற்று வழிமுறைகள் குறித்து உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான குறுகிய கால நடவடிக்கைகளாக வர்த்தக நடவடிக்கைகளை மாற்று நில மற்றும் கடல்வழிப் பாதைகளுக்கு மாற்றுதல், குறிப்பாக எரிசக்தி, உரங்கள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதிப்பதைத் தவிர்த்தல், மற்றும் மனிதாபிமான உணவு உதவிகளுக்கு எவ்வித வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய ரீதியில் வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இந்த உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0