உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற அழகுக்கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
70 பார்வைகள்

மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று (20) காலை 9.30 மணியளவில் அழகுக்கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

ரூபி அழகுக்கலை அக்கடமியின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் ரூபி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ரூபி அழகுக்கலை நிலையத்தில் ஓராண்டு கால அழகுக்கலைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முகமாகவும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான மணமகள் அலங்கார கண்காட்சியாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டி மெல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மணமகள் அலங்கார போட்டிகளில் பங்குபற்றி மிகச் சிறப்பான முறையில் அழகுக்கலை ஒப்பனைகளை மேற்கொண்ட வெற்றியாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

60 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0