உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை வழமைப் போல் பள்ளிவாசலில் வழிபாடுகள் நடந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பள்ளிவாசலுக்குள் நுழைந்த இருவர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பள்ளிவாசலின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலையின் இரு ஊழியர்கள் என மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து குறித்த இடத்துக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடி வந்த நிலையில், குறித்த பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 17 வயது சிறுவன் மற்றும் 18 வயது இளைஞன் ஆகிய இருவரும் தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு செய்துள்ளனர்.

இவ்வாறு உயிர்மாய்த்துக் கொண்டவர்கள் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0