அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விமானங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, அவற்றில் இருந்த நான்கு விமானிகள் பரசூட் உதவியுடன் பாதுகாப்பாக வான்வெளியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.