நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; இருவர் உயிரிழப்பு.!
சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், கட்டடங்கள் ஆகியன குலுங்கின.
இதனால், சுமார் 13 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், அதிர்வுகளால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள ஏராளமான வீதிகள் முடங்கியுள்ளன.