உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி போராடி வந்த தாய் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
67 பார்வைகள்

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த மேலும் ஒரு தாய் நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்கள் நேற்று (16) காலமானார்.

இவர் 05.09.1951 அன்று பிறந்தவர். தனது குடும்ப உறவுக்காக மட்டுமன்றி, வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்காக நீதியை கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள், கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் முயற்சியாக மட்டும் அல்லாது, இனி எவரும் இத்தகைய நிலைக்கு ஆளாகாதவாறு “மீள நிகழாமையை” உறுதி செய்யும் மனித உரிமைப் போராட்டமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“இன்று வாழும் அனைத்து தமிழர்களும் வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எங்கள் போராட்டம் தொடர்கிறது. ஆனால் சமூகம் அதனை போதுமான அளவில் கவனிக்காமல் கடந்து செல்கிறது” என அவர் போராட்டங்களில் பங்கேற்றபோது அடிக்கடி வலியுறுத்தி வந்ததாக உறவினர்கள் நினைவுகூருகின்றனர்.

திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்களின் மறைவு, நீதி தேடி பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

64 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0