உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
90 பார்வைகள்

கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை அக்கட்சியின் தேசிய செயற்குழு (NEC) வழங்கியுள்ளது.

இதன் மூலம் அவர் மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குள் (Westminster) நுழைவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட பர்ன்ஹாம் எடுத்த முயற்சியைத் தொழிற்கட்சியின் தலைமை தடுத்திருந்த நிலையில், தற்போது அவருக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘மேக்கர்ஃபீல்ட்’ (Makerfield) தொகுதியின் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டு, தேர்தலில் வெற்றிபெற்றால், தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை (Sir Keir Starmer) பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அடுத்த பிரதமராக அவர் உருவெடுக்கக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர், பதவியிலிருந்து விலகக் கோரும் அழுத்தங்களைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறார். தனது பதவி விலகலுக்கான எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்க மறுத்துள்ள அவர், ஆண்டி பர்ன்ஹாம் அல்லது வேறு எவரிடமிருந்தும் வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துப் பிரதமரின் ஆதரவாளரும், வீட்டுவசதி அமைச்சருமான ஸ்டீவ் ரீட் கருத்துத் தெரிவிக்கையில், “இது மிகவும் கடினமான ஒரு வாரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாம் இப்போது சற்று நிதானிக்க வேண்டும். இந்த வார இறுதியில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து, அடுத்த வாரம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பி, எங்களை நம்பி வாக்களித்த நாட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0