உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
51 பார்வைகள்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணி தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயிஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத், கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், தாதிய மேற்பாரவை உத்தியோகத்தர் உள்ளிட்ட வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0