உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் இன்று புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 11ஆவது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் காலை 9:30 மணியளவில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, அங்கு உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

கூட்டத்தின் போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளித்த தவிசாளர், பிரதேசத்தின் கல்வி மேம்பாடு குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“எமது பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன சமூக நிலையங்கள் ஊடாக நூலகங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அவை இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு தன்னார்வலர்கள் சேவை மனப்பாங்குடன் முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

61 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0