உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0