உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
71 பார்வைகள்

அமெரிக்கா​வின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்​லூரி​யில் ஜவுளி தொடர்​பான பாடங்கள் கற்​பிக்​கப்​படு​கின்​றன.

கடந்த 8 ஆம் திகதி வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்லூரியின் பட்​டமளிப்பு விழா நடை​பெற்​றது. இதில் 176 பேர் இளநிலை பட்​டங்​களை​யும், 26 பேர் முது​நிலை பட்​டங்​களை​யும் பெற்​றனர். இந்த விழா​வில் இந்​திய வம்​சாவளி தொழில​திபர் அனில் கோச்​சார் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். விழா​வில் பேசிய அவர், இளநிலை பட்​டம் பெற்ற 176 பேர் மற்​றும் முது​நிலை பட்​டம் பெற்ற 26 பேர் என மொத்​தம் 202 மாணவ, மாண​வியரின் கல்விக் கடனை அடைப்​ப​தாக உறுதி அளித்​து, அதற்​கான தொகையை வழங்கி​னார்.


ஒட்​டுமொத்​த​மாக மாணவ, மாண​வியரின் ரூ.76.18 கோடி கல்விக் கடனை அவர் அடைத்​தார். இதுதொடர்​பாக பட்​டமளிப்பு விழாவில் அனில் கோச்​சார் பேசி​ய​தாவது: எனது தந்தை பிர​காஷ் கோச்​சார், இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாகாணத்​தில் இருந்து அமெரிக்கா​வில் குடியேறி​னார். அவருக்​காக வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்​லூரி​யின் கதவு​கள் திறந்​தன.

கடந்த 1950-களில் எனது தந்தை இந்த கல்​லூரி​யில் பட்​டம் பெற்றார். ஜவுளி துறையில் மிகப்​பெரிய தொழில​திப​ராக உயர்ந்தார். இந்த கல்​லூரிக்கு நானும் எனது குடும்​ப​மும் கடன்பட்டிருக்​கிறோம். வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்லூரி​யில் பட்​டம் பெற்ற மாணவ, மாண​வியர் சுதந்​திர பறவைகளாக வாழ வேண்​டும்.


இதற்​காகவே அவர்​களின் கடன் சுமையை எங்​களது குடும்​பம் ஏற்றுக் கொண்​டிருக்​கிறது. எனது தந்தை இப்​போது உயிரோடு இல்​லை. அவரது நினை​வாக மாணவ, மாண​வியரின் கல்விக் கடன்​களை அடைக்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​திய தொழில​திபர் அனில் கோச்​சா​ருக்கு அனைத்து மாணவ,மாணவியரும்,கல்​லூரி நிர்​வாக​த்தினரும் மனதார நன்றி தெரிவித்தனர். நியூ​யார்க் டைம்​ஸ் உட்பட அமெரிக்​கா​வின் முன்னணி ஊடகங்​கள் அனில் கோச்​சாரை பா​ராட்​டி செய்திகளை வெளியிட்​டு உள்​ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0