உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
59 பார்வைகள்

ஈரானுடனான போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று 12 ஆம் திகதி கூறியதைத் தொடர்ந்து ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான நம்பிக்கைகள் மங்கின.

அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளுடன் சண்டையிட்டு வரும் லெபனான் உட்பட, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது இறையாண்மையை வலியுறுத்திய தெஹ்ரான், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பிற நிபந்தனைகளையும் கோரியுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 7 ஆம் திகதி அன்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் நிலையை ஈரானின் கோரிக்கைகள் அச்சுறுத்துவதாக ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்புடன் செவ்வாய்க்கிழமையன்று ஆசியாவின் ஆரம்பக்கால வர்த்தகத்தில், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் மேலும் ஏற்றம் கண்டு, ஒரு பீப்பாய் 104.50 டொலருக்கு மேல் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0