உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவருடன் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஓமான் வெளி விவகார அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் அல் புசைதி, சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் ஆர்செனியோ டொமிங்குவேஸை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் கடல்சார் சவால்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, சர்வதேச சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதன் அவசியத்தை ஓமான் வெளி விவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போது எழுந்துள்ள சிக்கல்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து, அமைதியான முறையிலும் இணக்கமான முறையிலும் தீர்வுகாண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அல் புசைதி, “வளைகுடாப் பகுதியில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்கும், கடலோர நாடுகளின் ஒத்துழைப்புடன் மனிதாபிமான அடிப்படையிலான முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் தற்போது அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0